இலங்கைக்கு மீண்டும் வருகை தந்த பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர்!

0
46

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில்  இன்றையதினம் (20) மற்றும் நாளை (21) இடம்பெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் கொழும்பில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.