ஓய்வு குறித்து சமரி முக்கிய அறிவிப்பு!

0
64

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள  மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தனது அணியை இறுதி சுற்றுக்கு தகுதி பெற வைப்பதே தனது இலக்கு என்றார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20-20 தொடரை 2-1 என கைப்பற்றி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

இறுதி ஒரு நாள் போட்டியில் சமரி அதபத்து ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.