ஞானசார தேரருக்கு இடியான செய்தி!

0
46

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(02) நிராகரித்துள்ளது.

தனது சேவை பெறுபவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை மனு இன்றைய தினம் காலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த மனுவை நிராகரித்தார். இஸ்லாத்துக்கு எதிராக தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக ஞானசாரருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.