முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிள்ளையான், கருணா போன்றவர்களை கைது செய்யும் வரை முஸ்லிம்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது.
ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியுள்ளார்.