கனடாவில் அநுர வெளியிட்ட தவறான அறிக்கை: ஹரின் பெர்னாண்டோ பகிரங்கம்

0
53

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் கனடாவில் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளில் மூன்று வீதமானவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக அநுர குமார கனடாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

பொய்யான அறிக்கை

இந்நிலையில், இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளில் முப்பத்து மூன்று வீதமானவர்கள் இலங்கைக்கு திரும்புவதாகவும் உண்மைகள் தெரியாவிட்டால், அது குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பது முக்கியம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் பிரஜைகள் பல தடவைகள் இந்த நாட்டிற்கு விஜயம் செய்து திரும்பியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, மீண்டும் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் வகையில் புதிய இடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.