சீனப் பெயர் மாற்றம்: மோடி அரசாங்கம் நிராகரிப்பு

0
108

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவால் சூடப்பட்ட சுமார் 30 இடங்களின் பெயர் மாற்றத்தை இந்தியா நிராகரித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என்றும் எல்லை மாகாணம் இந்தியாவின் “ஒருங்கிணைந்த” பகுதி என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவை சீனாவிற்கு தாரை வார்க்க துடிக்கும் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. இது எவ்வாறு நடந்துள்ளது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனை மறைப்பதற்கு சச்சத்தீவு விடயம் திசை திருப்பப்படும் நாடகமா” என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியொன்றிற்கு “ஸங்னங்” என சீனா பெயரிட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்கள், மலைகள், ஆறுகள் என 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.

அத்துடன் 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

தற்போது மீண்டும் நான்காவது முறையாக அருணாச்சல பிரேதேச பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சீனா இந்தியாவின் பிரேதேசங்களுக்கு பெயர் சூட்டி வரும் நிலையில் “சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பற்ற பாஜக அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்க துடிக்கிறது” என அவர் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.