ஊழியர் காதை கடித்த மாநகர சபை முன்னாள் உறுப்பினர்

0
51

கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு ஊழியர் ஒருவரின் காதை கடித்து துப்பிய கண்டி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலினால் மாநகரசபை ஊழியரின் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயங்கள் காரணமாக அவரது காது பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்மக்கழிவு முகாமைத்துவ திணைக்களத்தின் சுதஹம்பொல உப காரியாலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02) வேலையில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.