வாரியத்தின் உத்தரவு: ராணுவ பயிற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வெளியான காணொளி

0
92

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ராணுவ பயிற்சி எடுத்து வருகிறது. கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணி கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி காகுலில் (Kakul) உள்ள ராணுவப் பள்ளி உடற் பயிற்சி மையத்தில் இரண்டு வாரங்களுக்கு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துடன் பயிற்சி அமர்வுக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தில் பயிற்சி பெறும் காணொளியை PCB தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. டி20 கேப்டன் ஷஹீன் அப்ரிடி இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பாபர் மீண்டும் கேப்டனாக தெரிவு செய்யப்பட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையின் பின்னணியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

பயிற்சி முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 29 வீரர்கள்

ராணுவ முகாமில் பயிற்சி பெறும் கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சைம் அயூப், ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹசீபுல்லா, சவுத் ஷகீல், உஸ்மான் கான், முகமது ஹாரிஸ், சல்மான் அலி ஆகா, அசம் கான், இப்திகார் அகமது, இர்ஃபான் கான் நியாசி, ஷதாப் கான், உஸ்மத் வாசிம், உஸ்மத் வாசிம், நவாஸ், மெஹ்ரான் மும்தாஜ், அப்ரார் அகமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் அப்ரிடி, ஹசன் அலி, முகமது அலி, ஜமான் கான், முகமது வாசிம் ஜூனியர், அமீர் ஜமால், ஹரிஸ் ரவுஃப் மற்றும் முகமது அமீர் ஆகியோர் அடங்குவர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏப்ரல் 14 அன்று இஸ்லாமாபாத் செல்கிறது. அங்கிருந்து ஏப்ரல் 18, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியின் பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மூன்று டி 20 ஐ விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளைத் தொடர்ந்து ஏப்ரல் 25 மற்றும் 27 திகதிகளில் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்குச் செல்கிறது.