56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை!: 81 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

0
62

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 81 வயதான டேனிலா வேரா. இவருக்கு திடீரென அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டேனிலாவுக்க 3டி ஸ்கேன் எடுத்ததில் அவரது அடி வயிற்றுப் பகுதியில் இறந்த குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தக் கருவை மருத்துவ உலகம் ஸ்டோன் பேபி (Stone baby) என கூறுகிறது. டெனிலாவுக்கு கரு கர்ப்பப்பையில் உண்டாகாமல் கருப்பைக்கு வௌியில் உண்டாகியுள்ளது. இது இடம்மாறிய கர்ப்பம் (Ectopic pregnancy) எனப்படுகிறது. டேனிலா முதன் முதலாக கருவுற்றிருந்தபோது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கருப்பையை விட்டு வெளியே வளரும் கருவானது போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கருவானது சில நாட்களில் ஸ்டோன் பேபியாக மாறிவிடும்.

ஏழு குழந்தைக்கு தாயான டேனிலாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோதிலிருந்தே சிறிய வயிற்று வலி, அசௌகரியம் போன்றன இருந்துள்ளன. ஆனால் பெரிதாக அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இவ்வாறிருக்க 56 வருடங்களாக வயிற்றிலிருந்த ஸ்டோன் பேபியை அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் நீக்கியுள்ளனர். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.