‘சபாநாயகர் நியாயமாக நடந்து கொள்ளவில்லை’ அனுரகுமார திஸாநாயக்க விசனம்!

0
64

சபாநாயகர் ஒருபோதும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது.

பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் நீக்க இன்னும் 6,7 மாதங்களில் தேசியத் தேர்தல் வரவுள்ளது.எனவே சபாநாயகர் நாளை வெற்றிப்பெற்றாலும் இன்னும் 6 மாதங்களில் கண்டிப்பாக அவர் வீட்டுக்கு செல்ல வேண்டியே வரும்.

‘மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு என்ன நடந்தது? இது யாப்பாவின் உருக்குலைவு மட்டுமல்ல, நமது நாட்டு அரசியலின் உருக்குலைப்பாகும்.

‘சபாநாயகரே… சில சமயங்களில் அரசுக்குப் பயப்படுகிறார், சில சமயங்களில் எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் கிட்டத்தட்ட 2 மணிநேரம் இந்த அவையில் கதறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.