6 இலங்கையர்களை கொன்ற சந்தேக நபர் கேம்களுக்கு அடிமையானவரா..! வெளியான அதிர்ச்சித்தகவல்

0
200

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் , மன அழுத்தத்தால் கொலையை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையராவார்.  இந்நிலையில்  சொய்சா மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட விக்கிரமசிங்க குடும்பம் குறித்த இளைஞரை பராமரித்து வந்துள்ளனர். சந்தேக நபர் சீஸ்கேக் விரும்பி சாப்பிடும் ஒருவர் என்பதுடன்   குடும்பத்தினரிடம் பலமுறை சீஸ்கேக் வாங்கி கேட்பது வழக்கம்.

வீடியோ கேம்கள் விளையாடுவதில் ஆர்வம்

அதேசமயம் கொலைச்சந்தேக நபர் ,  விக்கிரமசிங்க குடும்பத்தின் பராமரிப்பில் இருப்பதற்கு முன்னர் வேறொரு இலங்கை குடும்பத்தின் பராமரிப்பில் இருந்துள்ளார்.

அங்கு இவர் வீடியோ கேம்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் அந்த வீட்டில் ஓழுங்கற்ற முறையில் செயற்பட்டதால் வீட்டின் உரிமையாளர்கள் இவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதன்போது , தனுஷ்க விக்ரமசிங்க என்பவர் குறித்த இளைஞரை பராமரிப்பதற்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். புதிய சூழல் என்றாலும் குறித்த இளைஞர் விக்ரமசிங்க குடும்பத்தின் பராமரிப்பில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த இளைஞரின் மன அழுத்த பாதிப்பே இந்த கொலை சம்பவத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரான தனுஷ்க விக்ரமசிங்க ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக கனடா ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.