கடற்றொழிலாளர் பிரச்சினை.. இரு நாட்டு அரசாங்கங்களும் பாரா முகமாக இருப்பது வேதனையளிக்கின்றது

0
82

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் கூட இரு நாட்டு அரசாங்கங்களும் பாரா முகமாக இருப்பது வேதனையளிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (06.03.2024) நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய கடல் வளமும் வாழ்வாதாரமும் திட்டமிட்டு இலங்கை இந்திய அரசால் அழிக்கப்படுகின்றது. அதற்கு தடை செய்யப்பட்ட இழுவைமடி தொழில்களே காரணம்.

அந்தவகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணைந்து மனு ஒன்றை கையளித்திருக்கிறோம். ஆனால், எமது போராடடங்களிற்கு அரசாங்கங்கள் உரிய தீர்வை தருவதாக எமக்கு தெரியவில்லை.

இந்நிலையில், நாங்கள் ஒரு மாத கால அவகாசத்திற்குள்ளே இரு நாட்டு அரசாங்கங்களும் கடற்படைகளும் இணைந்து இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படைக்குள் அத்துமீறி நுழையவிடாது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.