கடந்த மாதத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0
99

கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 154 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் சுற்றுலாத்துறையின் ஊடாக பெறப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை வருமானம் 

இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய் என இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் 269 மில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானமாக ஈட்டப்பட்டிருந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய மாதங்களை விட ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.