பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு புடினின் கூட்டணி கட்சி மிரட்டல்..!

0
99

உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் பிரான்சின் முடிவு நெப்போலியனின் படைகளுக்கு ஏற்பட்ட அதே நிலையை எதிர்கொள்ளும் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் கூட்டணி கட்சி ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.

இறப்பையும் பேரிழைப்பையும்

ரஷ்யா மீது 1812ல் படையெடுத்த நெப்போலியனின் படைகள் இறப்பையும் பேரிழைப்பையும் எதிர்கொண்டது. ஒருமித்த கருத்துகொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திங்களன்று முன்வைத்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை ஒருமித்த கருத்து எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு உடனடியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல மேற்கத்திய நாடுகளை அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று பதிலளிக்க வைத்தது.

ஆனால், நேட்டோவின் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் உக்ரைனில் போரிட துருப்புக்களை அனுப்பினால், அது ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிரான போராக மாறும் என ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையிலேயே விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரும் கூட்டணி கட்சி தலைவருமான Vyacheslav Volodin பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களுக்கு ஆபத்தாக முடியும்

தம்மை அவர் நெப்போலியன் என்று கருதுவதாகவும், அது பேரழிவில் முடியும் என்றும் எச்சரித்துள்ளார். மூன்றாம் உலகப்போருக்கு அது காரணமாக அமையும் என்றும், மேக்ரான் அதற்காக முயல்கிறாரா எனறும், அவரது முயற்சிகள் கண்டிப்பாக பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் Vyacheslav Volodin குறிப்பிட்டுள்ளார்.

நெப்போலியனுக்கும் அவர் பெரும் படைகளுக்கும் என்ன ஆனது என்பது குறித்து மேக்ரான் தெரிந்துகொள்வது அவசியம் என்றும், 600,000 மேற்பட்ட வீரர்களை நெப்போலியன் ரஷ்ய மண்ணில் இழந்தார் என்றும் Vyacheslav Volodin குறிப்பிட்டுள்ளார்.