ரஷ்ய தூதுவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த கனடா

0
91

கனடாவிற்கான ரஸ்ய தூதுவரை அழைத்து அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவால்னியின் மரணம் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கனடாவிற்கான ரஸ்ய தூதுவர் ஒல்க் ஸ்டெபாநொவை அழைத்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியின் கோரிக்கைக்கு அமைய ஸ்டெபாநொவிடம் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த மரணம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

நாவால்னியின் மரணம் தொடர்பில் பூரணமான வெளிப்படைத்தன்மையுடைய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.

நாவால்னியை, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கொலை செய்தார் என உலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த மரணம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.