எலான் மஸ்க்கின் X தளத்தில் புதிய அப்டேட்

0
140

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

குறிப்பாக மின்சார கார்களை தயாரிக்கும் அவரது டெஸ்லா நிறுவனம் உலக புகழ்பெற்றது.

மின்சார கார்கள் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனம் ரோபோக்களையும் உருவாக்கி வருகிறது.

x தளத்தில் வெளியான புதிய அப்டேட் | New Update Released On X Site

இதற்கிடையே எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியிடப்படுகிறது.

x தளத்தில் வெளியான புதிய அப்டேட் | New Update Released On X Site

X அறிக்கையின்படி, “ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை X இப்போது வெளியிடத் தொடங்கியுள்ளது.

பல பயனர்கள் அதன் புதுப்பிப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் இன்னும் பலர் அதைப் பெறவில்லை. இது அடுத்த சில நாட்களில் கிடைக்கும்.

x தளத்தில் வெளியான புதிய அப்டேட் | New Update Released On X Site

நீங்களும் ஒரு X பயனராக இருந்து இந்த அம்சத்தை விரும்பினால். உங்கள் x செயலியைப் புதுப்பிக்கவும். இதில் மூன்று அழைப்பு விருப்பங்கள் உள்ளன.

யார் அழைக்கலாம் மற்றும் யார் அழைக்க முடியாது என மூன்று விருப்பங்களைப் பெறுவீர்கள். குறிப்பாக x ப்ளூவுக்கு சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.” இவ்வாறு X அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.