யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த உயிரிழந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வழக்கில் தண்டனை பெற்ற மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015.05.13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்ட நிலையில் பாலியல் துஸ்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.