தமிழ் சினிமாவின் காதல் காவியம்: காதலுக்கு மரியாதை வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு

0
122

தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படங்களில் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படத்திற்கு முதன்மையான இடம் உண்டு.

இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 வருடங்கள் ஆகிறது. காதலுக்கு மரியாதை கடந்த 1997ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி வெளியானது. விஜய், ஷாலினி திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லான திரைப்படம் இது.

விஜய், ஷாலினியை துரத்தி துரத்தி காதலிப்பார். ஆனால் முதலில் ஷாலினி அதற்கு மறுத்தாலும் பின்னர் விஐய்யை காதலிப்பார். விஜயின் பெற்றோர் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிடுவார்கள்.

Oruvan

ஆனால் ஷாலினி வீட்டில் கடுமையான எதிர்ப்பு வரும். இறுதியில் இவர்கள் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதை வித்தியாசமான கோணத்தில் மனதை உருக்கும் வகையில் சொன்ன திரைப்படமே காதலுக்கு மரியாதை.

இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம். அதிலும் என்னை தாலாட்ட வருவாளா பாடல் 2கே கிட்ஸ்களை கூட இன்றளவும் கட்டிப்போட்டுள்ளது என கூறினால் அது மிகையாகாது..!

Oruvan