மேடையில் கண்ணீர் விட்டு அழுத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்!

0
166

உலகளவில் பல மர்மங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருந்து வருகின்றது. இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார்.

பரப்பளவில் வடகொரியா என்பது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும்தான் என கூறப்படுகிறது.

மேடையில் கண்ணீர் விட்டு அழுத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்! | North Korean Kim Jong Un Cried Tears On Stage

இந்நிலையில்தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார்.

வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

மேடையில் கண்ணீர் விட்டு அழுத வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்! | North Korean Kim Jong Un Cried Tears On Stage

நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும்.

பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என பேசும்போது கிம் ஜாங் உன் கண்கலங்கியுள்ளார்.