கனடிய அரசிற்கு 100 மில்லியன் டொலர் வழங்கும் கூகுள்..

0
184

கனடிய அரசாங்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆண்லைன் செய்திப் பிரசூரம் குறித்த கனடிய சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கால் செயின்ட் ஓன்ஞ் இது பற்றி அறிவித்துள்ளார்.

கனடிய உள்ளடக்கங்களுக்காக அதன் பிரசூரிப்பாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

செய்தி உள்ளிட்ட இணைய வழி செய்தி ஊடகங்களை பாதுகாக்கும் நோக்கில் லிபரல் அரசாங்கம் பில் சீ18 எனும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் டொலர் வழங்கும் கூகுள் நிறுவனம் | 100M A Year News Deal

கனடிய இந்த சட்டம் தொடர்பில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தன.

கூகுள் நிறுவனம் கனடாவில் செய்திகளை முடக்குவதற்கு தீர்மானித்திருந்தது.

பின்னர் அரசாங்கத்திற்கும் கூகுள் நிறுவனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, கொடுப்பனவு வழங்குவதற்கு இணங்கப்பட்டுள்ளது.

வருடமொன்றுக்கு கூகுள் நிறுவனம், கனடிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் டொலர்களை செலுத்த இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.