கனடா, ஆஸ்திரேலியாவில் மாவீரர் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு

0
211

யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மாவீரர் தின நிகழ்வுகள் இலங்கையை போன்று புலம்பெயர் நாடுகளிலும் நடைபெற்றன. மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் பெரும் உணர்வெழுச்சியுடன் அவுஸ்ரேலியா மற்றும் கனடாவில் நடைபெற்றன.

மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று அந்த நாடுகளில் வாழும் அரச அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.