அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கவலை தெரிவித்துள்ளார்.
முதலாவது உலகக் கோப்பையை இந்தியாவை வென்றெடுக்க வழிவகுத்த கபில்தேவ் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தொலைபேசியில் கூட தனக்கு அழைப்பு விடுக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, அவர் 1983 இந்திய அணியின் வீரர்களுடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தோல்வி
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியிடம் உலகக் கோப்பை பட்டத்தை இழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத இளம் இந்தியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் திருப்பதி துர்கா சமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞரே இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்கும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.