காசா மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் எங்கே அனுப்ப படுகின்றார்கள்..!

0
153

காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றி வருகிறது.

குழந்தைகள் மாற்றம்

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், காசா நகரை முற்றிலுமாக சோதனை வலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கொண்டு வந்துள்ளது.

ஹாமஸ் அமைப்பினரை கூண்டோடு அழிக்கும் முயற்சியில் இஸ்ரேலிய படை களமிறங்கி இருப்பதால், பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் ஆகிய அனைத்திலும் தேடல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையை இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

அத்துடன் நோயாளிகள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படை உத்தரவிட்டது.

un-and-idf-evacuate-infants-from-gaza-to-egypt காசா மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகள் வெளியேற்றம்: எங்கே அனுப்புகிறது இஸ்ரேல்?

இதனால் கிட்டத்தட்ட 2000 பேர் மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் குழந்தைகள் உட்பட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளான 291 நோயாளி கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அல்-ஷிஃபா மருத்துவமனையில் சிக்கி தவித்து வந்த குழந்தைகளை ஐக்கிய நாடுகள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை இணைந்து வெளியேற்றியுள்ளது.

பிறந்த சில நாட்களே ஆன இந்த குழந்தைகள் சிகிச்சைக்காக எகிப்து நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.