வெல்லம்பிட்டியில் சுவர் இடிந்து உயிரிழந்த சிறுமிக்காக மண்டியிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய அதிபர்..!

0
185

வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவியின் உடல் பலரின் கண்ணீருக்கு மத்தியில்  அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர் மண்டியிட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதுடன்  மாணவியின் உயிரிழப்புக்கு மன்னிப்பு கோரிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என   பல்லரும் மாணவியின்  உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீருடன் ஊடகங்களுக்கு கருத்து

wellampitiya school incident

அதேவேளை  சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து  பிரதேசவாசிகள் அதிபரை  தாக்கியதில் அதிபரின் வலது கண் சேதமடைந்துள்ளதுடன், கண்ணில் ப்லாஸ்டர் காணப்பட்டது.

இந்நிலையில்  கண்ணீருடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதிபர்,

பாடசாலையின் 3 மாடிக் கட்டிடத்தின் பாதுகாப்பற்ற கூரை ஓடுகள் உடைந்து கிடப்பதைப் பார்த்த போது தண்ணீர் குழாய் அமைப்பின் பாதுகாப்பின்மையை நான் காணவில்லை.

வாரம் இருமுறை கழுவி சுத்தம் செய்கிறேன். மாணவியின் உயிரைக் காக்க முடியவில்லை என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.  அதோடு மாணவியின் இழப்புக்கு  தன்னை மன்னிக்குமாறும்  அவர்  இதன்போது  கண்னீருடன் கேட்டுக்கொண்டமை அங்கிருந்தவர்களைன் கண்களையும் குளமாக்கியது.

wellampitiya school incident

  தனது பிறந்தநாளில் ஆறு வயது  மாணவி பாடசாலை சுவர் விழுந்து  உயிரிழந்த சம்பவம்  கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.