எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்.
இது தொடர்பில் இன்று (20) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர்,
குற்றவாளியாக இனம்காணப்பட்டால் தண்டனை வழங்க வேண்டும்
நாடாளுமன்றத்தில் தான் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுப்பதாக கூறினார்.
அதோடு , முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதன் மூலம் அது நிரூபிக்கப்பட்டால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், என் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்.