சம்பள அதிகரிப்பை பிற்போடும் ஜனாதிபதி ரணிலின் யோசனை! சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி

0
122

சம்பள அதிகரிப்பை பிற்போடும் யோசனையை முன்வைத்த ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஏன் சர்வதேச கடன் திட்டத்தை நாடுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் நடந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேசும் போது கடன் பெற வேண்டும், வரி அறவிட வேண்டும் பணம் அச்சிட வேண்டும் என்பதையே பிரஸ்தாபிக்க முயல்கின்றனர்.

சம்பள அதிகரிப்பு

“இவை மூன்றையும் மேற்கொள்ள விரும்பாமையினாலேயே ரணில் விக்ரமசிங்க சம்பள அதிகரிப்பை பிற்போட யோசனையை முன்வைத்திருந்தார்.

இவ்வாறு கூறிய ரணில் விக்ரமசிங்க தற்பொழுது மீண்டும் சர்வதேச கடன்திட்டத்தை நீடித்துள்ளதுடன் 2024 ஆம் ஆண்டு 18 பில்லியன் ரூபாய் சர்வதேச கடன் பெற திட்டமிட்டுள்ளார்.

இதனால் மீண்டும் பணம் அச்சிடவே நேரிடும் என்பதுடன்  ஜனவரி மாதம் முதல் நெருக்கடியை அக்டோபர் மாதம் வரை பிற்போட்டு ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

நுகர்வோர் வரி மற்றும் வருமான வரியினால் மாத்திரம் 184 பில்லியன் வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் முயல்கிறது. சம்பள அதிகரிப்பிற்காக 133 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இடது கையினால் 133 ரூபாவை வழங்கும் போது வலது கையினால் 184 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.