ஹோட்டலில் இரகசிய கூட்டம் நடத்திய அரசியல்வாதிகள்..

0
63

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முக்கிய கூட்டம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தற்போது புதிய கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் அரசியல் சக்தியை உருவாக்குவது தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான கூட்டமாக இது இடம்பெற்றுள்ளது.

இது மிகவும் இரகசியமாக நடத்தப்பட்டுள்ளதுடன், அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

புதிய கூட்டணி

இதற்காக, புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உருவாகும் புதிய அரசியல் சக்தி தொடர்பான பல இறுதி முடிவுகளை எடுக்கப்படaqqடுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஜனவரியில் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது என்ற முடிவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதையும் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.