பிக் பாஸில் ரெட் கார்டு பெற்று வெளியேறிய பிரதீப் தன்னுடைய கேர்ள் ப்ரெண்ட் என்று பெண் ஒருவரை சுரேஷ் தாத்தா மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் பிரதீப்
அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரதீப். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்பு அனைவருக்கும் பிடித்தவரானதுடன், பிரபலமாகவும் செய்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பியுள்ளனர். ஆனால் இதனை ரசிகர்கள் சில பிரபலங்கள் என எவரும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு கிளப்பி வருகின்றனர்.
வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், ரவீனா, மணி ஆகியோர் குற்றச்சாடடு வைத்து, பிரதீப் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவரை வெளியேற்றியுள்ளனர்.
ஆனால் அவர் இது எதையும் கண்டு கொள்ளாமல் பிரதீப் தான் வாங்கிய ரெட் கார்டை தனது பெண் தோழிகள், உறவினர்களை வைத்து கொண்டாடி புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
பிக் பாஸிலிருந்து வெளியேறினாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அடுத்தடுத்து வர தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி தனது யூடியூப் ஒன்றில் காணொளியை பதிவிட்டுள்ளார். இதில் பிரதீப் தனது கேர்ள் ப்ரெண்ட் மூலம் வந்து கலந்து கொண்டதுடன், அப்பெண்ணை சுரேஷ் தாத்தா அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும் அவர் காணொளி வெளியிடும் போது பிரதீப் அவருடன் இருந்து பாடல் பாடியதுடன், அவருக்கு பின்னே நின்று உணவருந்தி சுட்டித்தனம் செய்தும் வந்த காட்சியை பிரதீப் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.