யாழ் வரவுள்ள நடிகை குஷ்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்

0
132

தென்னிந்தியத் திரைப்பட நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகின்றமைக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் பகிரங்கமாகப் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தில இருந்து பல கலைஞர்கள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இதில் நடிகை குஷ்புவும் ஒருவராக வருகை தரவுள்ளார்.

இவ்வாறு வருகை தரும் நடிகை குஷ்பு இந்திய ஊடகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துவிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் உறவுகளை மகிழ்வித்தல் என்னும் பெயரில் இங்கு வருகின்றார் எனவும் விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்புப் கோர வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தக் கண்டனக் குரல்கள் தொடர்பில் நடிகை குஷ்பு இதுவரையில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.