இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் 7 உணவுகள்

0
266

இரத்தம் உடலில் உள்ள செல்லுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை எடுத்துச் செல்வதோடு கழிவுகள் மற்றும் பிற மாசுகளை நீக்குகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்துவது உடலில் இருந்து நச்சுக்களை இயற்கையாக வெளியேற்றி, நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவும் 7 உணவுகளை பற்றி பார்க்கலாம்.

பச்சை பூண்டு

பூண்டில் காணப்படும் அல்லிசின் என்பது கந்தகத்தைக் கொண்ட கலவை நச்சுப் பொருட்களிலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கும்.

அதோடு பூண்டில் உள்ள வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இரத்தத்தை மட்டுமல்லாது குடல் பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் இல்லாமல் வைத்திருக்கவும் உதவுகின்றன.

garlic/பூண்டு

கொத்தமல்லி இலை

கொத்தமல்லி இலை இரத்த ஓட்டத்தில் சேரும் மற்ற கன உலோகங்களை அகற்ற உதவுகிறது.

கொத்தமல்லியில் உள்ள சல்பர் கலவை இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி வீக்கத்தைக் குறைக்கின்றன.

coriander leaves/கொத்தமல்லி இலை

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்தத்தை சுத்தமாக்கவும் உதவுகிறது.

உணவில் அதிக பீட்ரூட்டை சேர்ப்பது கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்கவும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

beetroot/பீட்ரூட்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் நச்சு நீக்கும் பண்புகளை வெளிப்படுத்தும் கலவையைக் கொண்டுள்ளது.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சு நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

Turmeric /மஞ்சள்

மிளகாய்

மிளகாயில் உள்ள கேப்சைசின் இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.

இந்த கேப்சைசின் மிளகாய்க்கு காரத்தை கொடுக்கும் கலவை ஆகும். மேலும் இது சில புற்றுநோய்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

chilli/மிளகாய்

எலுமிச்சை

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்தவும் கல்லீரலை நச்சு நீக்கவும் உதவுகிறது.

மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியானது குளுதாதயோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

lemon/எலுமிச்சை

தண்ணீர்

நீர் இரத்தத்தின் PH அளவை பராமரிக்கவும், இரத்த திரவியத் தன்மையை பராமரிக்கவும் மற்றும் நச்சுகளை சிரமமின்றி வெளியேற்றவும் உதவுகிறது.

போதுமான தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட உதவுகிறது.  

water/தண்ணீர்