உக்ரைன் அதிபரின் வீட்டை ஏலம் விட்ட ரஷ்ய அதிகாரிகள்

0
166

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டை ரஷ்ய அதிகாரிகள் ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுமுறைக்காலங்களில் கிரைமியாவில் உள்ள வீட்டில்தான் ஸெலென்ஸ்கியின் குடும்பத்தார் ஓய்வெடுப்பர். இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள ஜெலென்ஸ்கிக்கு சொந்தமான வீட்டை ரஷ்ய அதிகாரிகள் இவ்வாண்டின் தொடக்கத்தில் கைப்பற்றினர்.

இதனையடுத்து கிரைமியாவில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டை ஆக்கிரமிப்பு ரஷ்ய அதிகாரிகள் ஏலத்தில் விற்றுவிட்டனர்.

அவ்வீட்டில்தான் விடுமுறைக்காலங்களில் ஸெலென்ஸ்கியின் குடும்பம் ஓய்வெடுக்கும் எனக் கூறப்பட்டது. அந்த 120 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட வீடு 44.3 மில்லியன் ரூபிளுக்கு (S$657,000)விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஏலத்தில் இருவர் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில் தொடக்க விலையை விட இரு மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.