லண்டன் பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன்!

0
158

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகரும் அரசியல் வாதியுமான விக்ரமனின் மீது பாலியல் புகார் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வசித்து வரும் கிருபா என்பவரை ஏமாற்றிய குற்றசாட்டில் விக்கிரமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரமிருந்தால் வழக்கை சந்திக்க தயார் 

அண்மையில் சமூக வலைதளம் மூலம் விக்ரமன் தனக்கு அறிமுகமானார் எனவும் நாளடைவில் தன்னை காதலிப்பது போல் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார் எனவும் கிருபா தெரிவித்திருந்தார்.

லண்டன் பெண்ணை ஏமாற்றிய பிக்பாஸ் விக்ரமன்! | Bigg Boss Vikraman Cheated On A London Girl

இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் “கிருபா ஆதராமில்லாமல் குற்றச்சாட்டு சொன்னதாகவும் ஆதாரமிருந்தால் வழக்கை சந்திக்க தயார் என்றும் விக்ரமன் கூறியிருந்தார்.

இந்நிலையில் கிருபா இணையதளம் மூலம் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் பெயரில் பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் விக்ரமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.