‘ஸ்ரீலங்கா அபிமான்ய – தேசிய கலை விழா’ நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0
147

‘ஸ்ரீலங்கா அபிமான்ய – தேசிய கலை விழா’ நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் பொது மக்களின் இரசனை மற்றும் பொழுதுபோக்குகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை ஓரிடத்தில் ஒழுங்குபடுத்தி 2023 டிசம்பர் மாதம் 30,31 மற்றும் 2024 ஜனவரி மாதம் 01 ஆம் திகதிகளில் ‘ஸ்ரீலங்கா அபிமான்ய – தேசிய கலை விழா’ நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஆனந்தகுமார சுவாமி மாவத்த, மற்றும் அதனைச் சூழவுள்ள தாமரைத் தடாக அரங்கம், தேசிய கலாபவனம், ஜோன் டி சில்வா நினைவுக் அரங்கம், விகாரமகா தேவி பூங்கா, புதிய நகர மண்டபம் மற்றும் தேசிய நூதனசாலை வளாகங்களை மையமாகக் கொண்டு உத்தேசிக்கப்பட்டுள்ள கலை விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக ‘ஸ்ரீலங்கா அபிமான்ய – தேசிய கலை விழா’ நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.