சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் தனது 68ஆவது வயதில் மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் ஒரு சீர்திருத்த எண்ணம் கொண்ட ஒரு அதிகாரத்துவவாதியாவார்.
லீ ஒரு காலத்தில் நாட்டின் வருங்கால ஜனாதிபதியாக இருந்த ஜனாதிபதி ஜி ஜின்பிங்கால் மறைக்கப்பட்டார் என பல விமர்சனனங்கள் இருந்த போதிலும் அவர் 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றினார்.
லீக்கு வியாழன் அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார் என்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் பிரதமராக இருந்த காலத்தில் லீ தனது கடினமான சக ஊழியர்களுடன் ஒப்பிடும்போது ஒரு நவீன துறைசார் நபராக வலம் வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.