ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் தொடர்பில் சுமந்திரன் காட்டம்!

0
51

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் பொதுமக்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க கொண்டு வந்ததாக இலங்கை தமிழரசுகட்சி வேட்பாளார் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து அவர்களுடன் பேசினார் என சுமந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சுமந்திரன், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு மக்களை அழைந்த்து வந்ததிலும் பார்க்க அந்த மக்கள் வசிக்கும் பகுதிகளிற்கு ஜனாதிபதி சென்று அவர்களுடன் உரையாடியிருக்கலாம். அதனால் செலவும் குறைவு என தெரிவித்துள்ளார்.

அதோடு அனுர குமாரதிசநாயக்கவின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்களிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.