பொதுவாக உலகளாவிய ரீதியில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அதனால் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உருவாகி வருகின்றன.
நமது முன்னோர்களை விட தற்போது இருக்கும் நாம் தான் அதிகமாக நோய்களால் பாதிக்கப்படுகின்றோம்.
இதற்கான முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்.
ஒரு மனிதன் இயங்குவதற்கு உணவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இதனை ஆரோக்கியம் நிறைந்தவையாக எடுத்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அனுபவிக்க விரும்பினால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தை தாண்டி தற்போது இருப்பவர்கள், பணத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் துரித உணவுகளை அதிகமாக எடுத்து கொள்கிறார்கள்.
இது காலப்போக்கில் அவர்களின் எடை துவக்கம் மலம் கழிப்பது வரை தாக்கம் செலுத்துகின்றன. அத்துடன் அன்றாட நாளை துவங்கும் போது ஆரோக்கியமான காலையுணவை சாப்பிட வேண்டும்.
சிலர் காலையில் சாப்பிட மாட்டார்கள், இது முற்றிலும் தவறான பழக்கம். மாறாக என்ன நடந்தாலும் காலையில் கஞ்சாவது குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் மனித உடலில் சில பாகங்கள் இயங்க ஆரம்பிக்கும்.
அந்த வகையில் ஆரோக்கியமான காலையுணவுகள் என்னென்ன? அதில் என்ன மாதிரியான சத்துக்கள் இருக்கின்றன? என்பது தொடர்பில் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.