ரணிலின் சீனப்பயணத்தில் இந்தியா அவதானம்..

0
155

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சீனப்பயணம் குறித்து இந்தியா அவதானம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது புதிய பட்டுப் பாதை திட்டத்துக்குரிய சர்வதேச ஒத்துழைப்பை பெறும் வகையில் நேற்று நடத்திய முக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட ரணில் விக்ரமசிங்க அங்கு வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக இந்தியா அவதானம் செலுத்தியுள்ளதாக டெல்லி செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு உறுத்தல்

இந்தியாவுக்கு உறுத்தலை ஏற்படுத்தும் சீன ஆராய்ச்சிக் கப்பல் அடுத்தமாதம் இலங்கை செல்வதற்குரிய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு விடயங்களில் சீனா முக்கிய சாதகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்குரிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாகவும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.