ஆறுதல் கூற பலஸ்தீன தூதரகத்திற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ

0
193

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இடம்பெற்றுவரும் நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது பாலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடிய மஹிந்த ராஜபக்ஷ, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும் போர் தீர்வாக அமையாது என்றும் கூறியுள்ளார்.

பாலஸ்தீன கொள்கைக்கு ஆதரவு

அத்துடன் யுத்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை சுட்டிக்காட்டிய மஹிந்த சமாதானத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் என்ற முறையில் தான் பாலஸ்தீனத்தின் கொள்கையை ஆதரிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குடு இடையே கடந்த 7 ஆம்திகதி தொடங்கிய போரானது இன்னும் முடிவுக்கு வராது நீண்டுவரும் நிலையில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.