பார்த்தால் திருடிக்கொள்வேன் – ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்!

0
270

நடிகை தனக்கு உள்ள ஈர்ப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர்.

keerthy-suresh-about-sarees

அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் டாப் நடிகர்கள் பலருடன் இனைந்து நடித்துள்ளார். தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

நடிகை பேட்டி

இந்நிலையில், கோவையில் ஒரு துணிக்கடை திறப்புவிழாவில் கலந்துக்கொண்டு பேசினார். அதில், “கோயம்புத்தூருக்கு முதன்முறையா கடை திறப்பு விழாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. கடையை திறக்க வந்த நான் வாடிக்கையாளராக மாறி சில புடவைகளை வாங்கினேன். ஐந்து, ஆறாம் வகுப்பு படிக்கும்போது சேலை அணிந்து கண்ணாடி முன் நின்று ரசித்திருக்கிறேன்.

keerthy-suresh-about-sarees

அதேபோல் திறப்பு விழாவுக்கு வரும்போது அதிகளவு சேலையை வாங்குவேன். சில சமயம் அம்மாவிடம் இருந்து சேலை திருடியும் இருக்கிறேன். ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, ஜெயம் ரவியுடன் சைரன் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறேன்.

தற்போதைய காலகட்டத்தி கைத்தறி புடவை மதிப்பு குறைந்திருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயலாற்ற வேண்டும். நமது கலாசாரம் அழிவதை உடனடியாக தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.