முதன் முறையாக கனேடிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கறுப்பினத்தவர்

0
168

கனடா நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கிரெக் பெர்கஸ் என்ற கனேடிய கறுப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அவர் கடந்த செவ்வாயன்று (03) நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கறுப்பினத்தவர் என்ற பெருமையினை கிரெக் பெர்கஸ் தனதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் அண்டனி ரோட்டா கடந்த வாரம் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சபாநாயகருக்காக மீண்டும் இடம் பெற்ற தேர்தலில் கியூபெக் லிபரல் சட்டமியற்றுபவரான 54 வயதான கிரெக் பெர்கஸ் என்பவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டமியற்றுபவர்கள் இவரை இரகசிய வாக்கெடுப்பு மூலமாக சபாநாயகராக தேர்ந்தெடுத்தாதாக தெரிவிக்கப்படுகின்றது.