லியோ படத்தின் டிரைலர் சாதனை! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்

0
179

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ட்ரைலர் 28 மில்லியன் பார்வையாளர்களை 24 மணிநேரத்திற்குள் கடந்து சாதனை படைத்துள்ளது.

லியோ படத்தின் ட்ரைய்லர் நேற்று, சன் டிவி தொலைக்காட்சியில் மாலை சரியாக 6.30 மணிக்கு வெளியானது. இந்த ட்ரைலர் வெளியாகி சரியாக 5 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது.

மேலும், லியோ ட்ரைலர் தற்போது தமிழில் 28 மில்லியனும், தெலுங்கில் 4.3 மில்லியனும், இந்தி 3.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.