தாறுமாறாக ஏறும் உடல் எடையை குறைக்க உணவுகள்..

0
220

உடல் பருமன் இன்று ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவால் உடல் பருமன் துவங்குகிறது.

உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. கூடுதலாக எடை அதிகரித்தால் இளம் வயதிலேயே வயதான தோற்றமும் வரக்கூடும்.

தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரிப்பதாலும் உடல் எடை அதிகரிப்பாலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க மக்கள் இன்றைய காலத்தில் அதிக அளவில் ஜிம் செல்கிறார்கள், உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்தான். உணவில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் இதற்கு இன்றியமையாதது என நிபுணர்களின் கூறுகிறார்கள்.

இதில் காலை உணவிற்கு அதிக பங்குள்ளது. காலை உணவில் குறைந்த புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை உட்கொண்டால், அது உங்கள் பசியைத் திருப்திப்படுத்தாது.

இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில் காலையில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எடை இழப்புக்கு (Weight Loss) உகந்த சில சிறந்த காலை உணவுகளை இந்த பதிவில் காணலாம்.

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

புரத ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தி செய்ய வறுத்த மக்கானா, கொண்டைக்கடலை, பாதாம் பால் மற்றும் அரை வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றை ப்ளேண்ட் செய்து காலையில் குடிக்கவும். இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். கூடுதலாக போதுமான புரதத்தைப் பெறுவீர்கள்.

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

முளைத்த பயறுடன் அவல்

இதில் அவலுடன் முளைத்த பயறு அல்லது பயத்தம்பருப்பைக் கலந்து சாப்பிடலாம். இது பசியைத் தணித்து குறைந்த கலோரிகளை உங்களுக்கு வழங்குகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிக்காது. 

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

கடலை மாவு டோக்லா

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டோக்லா ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இது கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

காலை உணவாக டோக்லா சாப்பிடுவது உங்கள் பசியை தணிக்கிறது.

வயிற்றில் நிரம்பி உணர்வு இருப்பதால், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

டோக்லாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்கின்றன.

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

தயிர்

தயிரில் அதிக புரதம் உள்ளது. இதில் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

கலோரிகள் இதில் மிகவும் குறைவு. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் காலை உணவில் தயிர் சாப்பிடலாம். இதனுடன் அவலும் கலந்து சாப்பிடலாம்.

தாறுமாறா ஏறும் உடல் எடையை குறைக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க | Eat These Foods For Weight Loss

பயத்தம்பருப்பு அடை

பயத்தம்பருப்பு அடையில் சுரைக்காயை துருவி சேர்க்கலாம். இந்த அடையில் புரதம் நிறைந்துள்ளது.

இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் வெளியில் சாப்பிடும் எண்ணம் வராது.

உடல் பருமன் வேகமாக குறைய ஆரம்பிக்கிறது.

இது தவிர முட்டை, இட்லி, தோசை, பொங்கல், சியா விதைகள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உடல் பருமனை போக்க, உணவோடு சேர்த்து, அன்றாட நடவடிக்கைகளில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.