அழுக்கு துணி பிஸ்னஸ் தம்பதி! ரூ.100 கோடி வரை வர்த்தகம்

0
218

இந்திய மாநிலம், பீகாரில் கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து அழுக்கு துணியை அடிப்படையாக வைத்து தொடங்கிய பிஸ்னஸ் தற்போது ரூ.100 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது.

UClean

பீகார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்தவர் அருணாப் சின்ஹா. இவர், தனது மனைவி குஞ்சன் சின்ஹாவுடன் சேர்ந்து அழுக்கு துணியை அடிப்படையாக வைத்து ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கி உள்ளார்.

இவர், வட இந்தியாவில் உள்ள இந்தியாவில் குறைந்த கட்டண ஹோட்டல்களின் செயல்பாடுகளை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அங்கு, பெரிய பிரச்னையையாக இருப்பது சலவைத்துறை என்பதை கண்டறிந்தார்.

இதனால், இவர் இதனை அடிப்படையாக வைத்து வர்த்தகத்தை துவக்கினால் பெரிதாக சாதிக்கலாம் என்று நம்பி வட இந்தியாவில் தொடங்கினார். இளைஞர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெறும் என்றும் அருணாப் நம்பினார்.

UClean

ரூ.84 லட்சம் சம்பளத்தை விட்டு பிஸ்னஸ்

கடந்த 2016 ஆம் ஆண்டு அருணாப் சின்ஹா தனது வேலையை விட்டார். பின்பு, 2017 ஆண்டு ரூ.20 லட்சம் முதலீட்டில் UClean என்ற சலவை சேவையை தொடங்கினார். தற்போது, இவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

அருணாப் சின்ஹா தனது வேலையை விடும் போது, அவரது சம்பளத்தின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும். இவர் தனது விடா முயற்சியில் ஐஐடியில் சேர்வதற்கு கடுமையாக படித்தார்.

UClean

கல்லூரி படிப்பையும் முடித்து வெளிநாட்டிற்கு சென்றார். 2015 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இவர், ஃபிராங்லோபல் என்ற முதல் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி தோல்வியடைந்து Tribo Hotels -யில் பணியில் சேர்ந்தார்.

தற்போது, இவர் தொடங்கிய UClean வர்த்தகம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.20 லட்சத்தில் தொடங்கிய வர்த்தகம், ரூ.100 கோடியை எட்டியுள்ளது.