கை, கால்கள் கட்டப்பட்டு மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! வெளியான தகவல்

0
173

மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல் மஜித் அறிவித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் இந்த மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த 22ஆம் திகதி இரவு செந்தூல் பகுதியில் உள்ள இலங்கை தம்பதிகளுக்கு சொந்தமான வீடொன்றில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும் இரண்டு இலங்கையர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல் | Malaysia Srilankan Murter Investigation

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்துள்ளதுடன், அவர்கள் இந்த கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், தலையை மூடி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மூவரின் சடலங்களையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டு பொது மக்களிடம் உதவிகோரியுள்ளனர்.