வேலை தேடி 22 வயதில் கனடா சென்றவர்; இன்று கனடாவின் பணக்கார இந்தியர்!

0
147

கனடாவின் Condo King என பரவலாக அறியப்படும் பில் மல்ஹோத்ரா, தமது 22வது வயதில் வேலை வாய்ப்பு தேடி கனடாவில் குடிபெயர்ந்துள்ளார்.

இவர் இந்தியாவின் புகழ்பெற்ற BITS Pilani-ல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் தனது 22 வயதில் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

தற்போது பில் மல்ஹோத்ராவுக்கு 74 வயதாகிறது. இன்றைய நாளில் கனடாவில் ஒட்டாவாவில் உள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான கிளாரிட்ஜ் ஹோம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

கனடாவில் Condo King என அறியப்படும் இவர் 1986ல் Claridge Homes என்ற கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார்.

22 வயதில் வேலை தேடி வந்தவர்: இன்று கனடாவின் பணக்கார இந்தியர்! | Canada S Richest Indian Bill Malhotra Migrated

இதற்கு முன்னர் 1977 முதல் 1986 வரையில் ஒட்டாவா நகரின் தலைமை கட்டமைப்பு பொறியாளராக மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார்.

1971ல் கனடாவுக்கு புலம்பெயர்ந்த மல்ஹோத்ரா பொறியியல் சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.