கடும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ள பாகிஸ்தான்; உலக வங்கி எச்சரிக்கை!

0
286

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் எதிர்வரும் ஆண்டு பொது தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தானிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தானின் அடுத்த அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என கொள்கை குறிப்புகளை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

உலக வங்கி தனது குறிப்புகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டில் பாகிஸ்தானில் வறுமை ஒரு வருடத்திற்குள் 34.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழே 1¼ கோடி மக்கள் வறுமை உள்ளனர். சுமார் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடையும் முயற்சியில் வீணான செலவினங்களைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.