கனடா – இந்தியா முறுகல்; வெள்ளை மாளிகையின் தகவல்..

0
216

இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்ட நிலையில் கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சுமத்திய்தால் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகை நிலை உருவானது.

இதனையது தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது.

கனடா மக்களின் விசாவை நிறுத்திய  இந்தியா

கனடா - இந்தியா முறுகல் நிலை; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் | Canada India Twisting Position White House

அதுமட்டுமல்லாது கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இதன்போது,

கனடா - இந்தியா முறுகல் நிலை; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் | Canada India Twisting Position White House

நாங்கள் கனடா அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம். அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன்.

மேலும் நாம் நடப்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.