பாடசாலை மாணவர்களின் பைகளுக்குள் சிக்கிய இன்ஹேலர் கருவிகள்!

0
194

குருநாகல்  கொகரெல்ல பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அந்த பாடசாலையின் ஆசிரியர், மாணவர்களின் புத்தக பைகளை அவசரமாக ஆய்வு செய்ததில், பல மாணவர்களின் பைகளில் இன்ஹேலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் முறைப்பாடு

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இப்பாகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்தக் கருவிகள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் கொகரெல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.