துபாயில் சைமா விருதுகளை அள்ளி குவித்த தமிழ் பிரபலங்கள்

0
279

தென்னிந்திய நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் சைமா விருது விழா நடந்து வருகின்றது. கடந்த வருடத்திற்கான படங்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் துபாயில் பிரமாண்டமாக நடந்தது.

இவ்விழாவில் கமல், ஸ்ருதி ஹாசன், யோகிபாபு, மணிரத்னம் போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற தமிழ் நடிகர்களின் முழுப்பட்டியல் பின்வருமாறு,

சிறந்த பாடகர் மற்றும் நடிகர் – நடிகர் கமல்ஹாசன்

சாதனையாளர் விருது – மணிரத்னம் (பொன்னியின் செல்வன் )

சிறந்த இயக்குநர் – லோகேஷ் கனகராஜ் (விக்ரம்)

சிறந்த நடிகை – திரிஷா (பொன்னியின் செல்வன் )

சிறந்த அறிமுக நடிகர் – பிரதீப் ரங்கநாதன்(லவ் டுடே)

சிறந்த அறிமுக நடிகை – அதிதி ஷங்கர் (விருமன்)

சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் – மாதவன் (ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு சைமா விருது)

சிறந்த நகைச்சுவை நடிகர் – யோகிபாபு (லவ் டுடே)

சிறந்த கலை இயக்குனர் – தோட்டா தரணி (பொன்னியின் செல்வன் )

சிறந்த வில்லன் – எஸ்.ஜே.சூர்யா ( டான் )

சிறந்த துணை நடிகர் – காளி வெங்கட் ( சூர்யா தயாரித்த கார்கி )

சிறந்த துணை நடிகை – வசந்தி (விக்ரம்)

சிறந்த பாடலாசிரியர் – இளங்கோ கிருஷ்ணன் (பொன்னியின் செல்வன் – பொன்னி நதி )

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் )