விருது வழங்கும் விழாவில் ‘லியோ’ படம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்: அதிர்ந்த அரங்கம்

0
88

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படம் குறித்து சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சைமா விருது நிகழ்ச்சியானது துபாயில் நடைபெற்றது. இதில் விக்ரம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை லோகேஷ் கனராஜ் தட்டி சென்றார். பின்னர் அவர் பேசும் போது, லியோ திரைப்படம் தொடர்பான அப்டேட் கொடுக்காதது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த லோகேஷ், “படம் தொடர்பாக நிறைய வேலைகள் இருந்தன. அதனால்தான் அப்டேட் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அப்டேட்டை கொஞ்சம் தள்ளி வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம்.

படம் வெளியீட்டுக்கு 30 நாட்கள் முன்பிருந்து படம் தொடர்பான அப்டேட்களை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆகையால் நாளைக்கு (இன்றிலிருந்து) முதல் அப்டேட் வருகிறது.” என்று பேசினார்.